விஜயதசமி நாளில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
விஜயதசமி நாளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
* அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் 14 வகை நலத்திட்டங்கள் குறித்து பொதுஇடங்களில் விளம்பர பதாகைகள் வைக்க வேண்டும் என கல்வித்துறை இயக்குநர் கருப்பசாமி குறிப்பிட்டுள்ளார்.
* பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் கூட்டங்கள் நடத்தி இந்த நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
* பள்ளியைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் 5 வயது குழந்தைகளை கண்டறிந்து அவர்களை விஜயதசமி நாளன்று பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
* குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதுடன் அன்றைய தினமே விலையில்லா பாடப்புத்தகம், சீருடைகளை வழங்க வேண்டும் என கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.