தொடர் விடுமுறை : ஆம்னி பேருந்துகளில் 2 மடங்கு கட்டணம் என புகார்

நான்கு நாட்கள் தொடர் விடுமுறையால் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலையில், ஆம்னி பேருந்துகளில் 2 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

Update: 2018-10-17 13:38 GMT
* சென்னையில் இருந்து தமிழகத்தின்  பிற மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட ஆம்னி  பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாளை ஆயுத பூஜையும், மறுதினம் விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளதால், ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.  ரயில் மற்றும் அரசு பேருந்துகளில் முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்ட  நிலையில் பெரும்பாலானோர் ஆம்னி பேருந்துகளை நம்பி உள்ளனர். 

* சாதாரண ஆம்னி பேருந்துகளில் 50 சதவீதம் கூடுதல் கட்டணமும், குளிர்சாதன பேருந்துகளில் இருமடங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். முன்பதிவு செய்யப்படும் இணைய தளங்களிலே இந்த கட்டண விபரம்  உள்ளதாகவும், போக்குவரத்துறை இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்