உலக உணவு தினம் இன்று: 20 ஆண்டுகளாக உணவுக்காக போராடும் அவலம்
உலக உணவு தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில் ஒசூர் அருகே 20 ஆண்டுகளாக பழங்குடியின மக்கள் உணவுக்காக போராடி வருகின்றனர்.
* ஒசூர் அருகேயுள்ள வனப்பகுதியில் குரும்பட்டி என்ற கிராமம் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பெட்டமுகிலாளம் என்ற மலைக்கிராமத்திலிருந்து உணவைத் தேடி குரும்பட்டிக்கு இடம் பெயர்ந்த மூதாட்டி கெம்பம்மாவின் குடும்பம் தற்போது 7 குடும்பங்களாக பெருகியுள்ளது.
* இந்த 7 குடும்பங்களில் பெரியவர்கள், சிறியவர்கள் என 50க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள் அங்குள்ள வனப்பகுதியில் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
* இவர்கள் அன்றாடம் வேலை செய்தால் தான் கூலி என்ற நிலை உள்ளது. ஆனால் வேலை இல்லாத நாட்களில் எல்லாம் இவர்கள் வீட்டில் உணவு என்பதே கேள்விக்குறியாகி விடும் நிலை தான்..
* இந்த 7 குடும்பங்களில் 4 குடும்பத்தினருக்கு மட்டுமே ரேசன் கார்டு உள்ளது. ரேஷன் கடைகளில் அவர்களுக்கு வழங்கப்படும் அரிசியை 50 பேரும் பகிர்ந்து சாப்பிடும் அவலம் உள்ளதாக கூறப்படுகிறது..
* பழங்குடியின மக்களான இவர்களுக்கு போதிய உணவு கிடைக்காததால் சத்துக் குறைபாட்டால் இறந்த குழந்தைகளும் உண்டு. அதேபோல் ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட பெண்களும் ஏராளம்.
* தங்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையே இவர்கள் சார்பாக முன்வைக்கப்படுகிறது.