"ஜெயலலிதா மரணம் - விசாரணையில் தாமதமில்லை" - ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விளக்கம்
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் எந்த காலதாமதமும் இல்லை என ஆறுமுகசாமி ஆணையம் விளக்கம் அளித்துள்ளது .
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் எந்த காலதாமதமும் இல்லை என ஆறுமுகசாமி ஆணையம் விளக்கம் அளித்துள்ளது . விசாரணை தொடங்கப்பட்ட போது யார் யாரெல்லாம் விசாரிக்கப்பட வேண்டும் என எந்த பட்டியலையும் அரசு தரவில்லை என ஆணைய வழக்கறிஞர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.ஆணையம் தானாக முன்வந்து போயஸ் தோட்டத்தில் துவங்கி, அப்பலோ மருத்துவமனை வரை விசாரணைக்கு தொடர்புடையவர்கள் என கருதிய, 110 பேரிடம் விசாரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆணைய பணிகளை நிறைவு செய்ய , குறைந்தது நான்கு மாதம் அவகாசம் தேவை என கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் வழக்கறிஞர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.