குட்கா வழக்கு - விழுப்புரம் எஸ்.பி.ஜெயக்குமாரிடம் 2வது நாளாக விசாரணை
குட்கா வழக்கு - விழுப்புரம் எஸ்.பி.ஜெயக்குமாரிடம் 2வது நாளாக விசாரணை
குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி சி.பி.ஐ தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட சம்மன் அடிப்படையில்,இரண்டாம் நாளாக நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆஜரானார். அவரிடம், குட்கா நிறுவனத்தில் இருந்து யாரேனும் உங்களை அணுகினார்களா, மேல் அதிகாரிகளுக்கு முறையாக விளக்கம் அளித்தீர்களா, அதிகாரிகள் உங்களுக்கு ஏதேனும் அழுத்தம் கொடுத்தார்களா என்று பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 8 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள், காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர்