உச்ச-உயர்நீதிமன்ற நீதிபதிகள் வார நாட்களில் விடுமுறை எடுக்க தடை

நாடு முழுவதும் வழக்குகள் தேக்கத்தை முடிவுக்கு கொண்டு வர உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு விடுமுறை எடுப்பதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

Update: 2018-10-12 14:01 GMT
* நாட்டில் உள்ள நீதிமன்றங்களில்  தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக உயர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் கீழ் நீதிமன்ற நீதிபதிகளுக்கு விடுமுறை எடுப்பதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. 

* உச்ச​நீதிமன்ற கொலுஜியம் , உயர்​நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மற்றும் 2 மூத்த நீதிபதிகள் உடனான ஆலோசனைக்கு பின்னர் இந்த முறையை தலைமை ​நீதிபதி ரஞ்சன் கோகோய் அறிமுகப்படுத்தி உள்ளார். 

* இனி வார நாட்களில் அத்தியாவசிய விடுப்பு தவிர பிற விடுப்புகள் எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆண்டு தோறும் 3 முறை சுற்றுலா விடுப்பு எடுக்கும் முறையை மறுபரிசீலனை செய்ய நீதிபதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 

* இதேபோன்று நீதிமன்ற வேலைநாட்களில் நீதிபதிகள் நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்கில் பங்கேற்பது , அயல்நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 

* கீழ்நீதிமன்றங்களில் வழக்குகள் தீர்வுக் காணப்படுவது தொடர்பாக இனி நாள்தோறும் கண்காணிக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

* தற்போது 3 மாதங்களுக்கு ஒருமுறை இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மேலும் குற்ற வழக்குகளில் விசாரணை நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்டு, உயர்நீதிமன்றங்களில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளாக நிலுவையில் உள்ள மேல்முறையீடு வழக்குகளை விசாரணைக்கு விரைந்து பட்டியலிடவும்,  இதுபோன்ற நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பான பட்டிய​லை உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பவும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* இதுதவிர, தகுதியான நபர்களை நீதிபதி பணியிடத்துக்கு தேர்வு செய்து அனுப்பவும், இந்த பணியில் எந்தவித அழுத்தத்துக்கும் இடம் தர வேண்டாம் என்றும் தலைமை நீதிபதி, உயர்நீதிமன்ற கொலுஜியத்தை தலைமை நீதிபதி கேட்டுக் கொண்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்