எதிர்பார்ப்பில் இருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் - மழையால் பருத்தி விவசாயம் கடும் பாதிப்பு
கடந்த சில தினங்களாக பெய்த மழையால் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வரும் பருத்தி 90 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த சில தினங்களாக பெய்த மழையால், கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வரும் பருத்தி 90 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு விலை 4 ஆயிரத்து 500 முதல் 5,000 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த பருத்தி, இந்த ஆண்டு ஒரு குவிண்டால் 6,500 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்த நிலையில், மழையால், பருத்தி எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக, 300 குவிண்டால் வரக்கூடிய கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வெறும் 30 குவிண்டால் பருத்தி மட்டுமே வந்துள்ளது.