தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியர் தற்கொலை
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியர் ராஜசேகர் உரக் குடோனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியர் ராஜசேகர் உரக் குடோனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.
அவர் சட்டை பாக்கெட்டில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளன்னர் . அதில் தமது சாவுக்கு கடன் சுமையும்,வேலை சுமையுமே காரணம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பணி உயர்வு விவகாரத்தில் செயலாளர் அல்லி முத்து செய்த தவறுக்கு, அப்போது இருந்த தனி அலுவலர் வஹிதாபேகம் தம்மை மிரட்டி பணியவைத்தார் என்றும் எழுதப்பட்டிருந்தது. பணி உயர்வுக்காக 21 ஆண்டுகளாக பல லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.