"கேக்குகளில் இறந்த நிலையில் கிடந்த ஈக்கள்" - கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க துணை ஆட்சியர் சரயூ உத்தரவு
"வாடிக்கையாளர் பார்வைக்கு வைத்த துணை ஆட்சியர்"
கடலூர் பேருந்து நிலையத்தில் குப்பைகளை அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. இதனிடையே, துணை ஆட்சியர் சரயூ, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடன் இணைந்து பேருந்து நிலையத்தில் இருக்கும் கடைகளில் ஆய்வு செய்தார். ஒரு பேக்கரியில் கேக்குகளில் ஈ க்கள் செத்து கிடந்ததை பார்த்த அவர், அதனை வாடிக்கையாளர் பார்வைக்கு வைத்தார். மேலும், கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். துணை ஆட்சியரின் இந்த நடவடிக்கை கடலூர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.