மணப்பாறை : 2 தனியார் பேருந்துகள் கவிழ்ந்து விபத்து
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கல்லுப்பட்டி அருகே தனியார் பேருந்து ஒன்று சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கல்லுப்பட்டி அருகே தனியார் பேருந்து ஒன்று சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சென்னையை சேர்ந்த ஏனோக் என்ற ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த 20 பயணிகளை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீட்பு பணிகள் நடைபெற்ற போது அவ்வழியே வந்த மற்றொரு தனியார் பேருந்தும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்
5 பேர் படுகாயமடைந்தனர். கடந்த 2 நாட்களில் மட்டும் அப்பகுதியில் 5 பேருந்துகள் விபத்துக்குள்ளானதால் ஒட்டுனர்கள் அச்சமடைந்துள்ளனர்.