சிவாஜி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

சிவாஜிகணேசனின் பிறந்த நாள், இனி ஆண்டுதோறும், அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்துள்ளார்.

Update: 2018-10-01 20:44 GMT
சிவாஜி கணேசனின் 91 - வது பிறந்த நாளையொட்டி, சென்னை - அடையாறு மணிமண்டபத்தில் உள்ள அவரது முழு உருவச்சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. 



துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் , அமைச்சர்கள் டாக்டர் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ மற்றும் முக்கிய பிரமுகர்கள், சிவாஜி குடும்பத்தினர், மலர் தூவி, மரியாதை செலுத்தினர். 

" சிவாஜி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாட்டம்"



சிவாஜிகணேசனின் பிறந்த நாள், இனி ஆண்டுதோறும், அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்துள்ளார். சென்னையில், சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புகைப்பட கண்காட்சி, ஒலியும் - ஒளியும் கண்காட்சி அமைப்பது குறித்து, பரிசீலிக்கப்படும் என்றார். சிவாஜி கணேசனுக்கு மற்றொரு சிலை வைக்க கோரிக்கை வைத்தால், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ, உறுதி அளித்தார்.

அரசு விழா அறிவிப்பு : நடிகர் பிரபு நன்றி



சிவாஜி கணேசனின் மகனும் நடிகருமான பிரபு, அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். 
சிவாஜி சிலைக்கு கீழே, கருணாநிதியின் பெயரை பொறிக்க,  ஏற்பாடு செய்யப்படும் என தமிழகஅரசு உறுதி அளித்துள்ளதாகவும் நடிகர் பிரிபு தெரிவித்தார். 


Tags:    

மேலும் செய்திகள்