குட்கா முறைகேடு வழக்கு : அதிகாரி சிவக்குமார் மீண்டும் சிறையில் அடைப்பு
குட்கா முறைகேடு வழக்கில் சிபிஐ காவல் முடிந்து, ஆஜர்படுத்தப்பட்ட உணவு பாதுகாப்புத்துறை முன்னாள் அதிகாரி சிவக்குமாரை, மீண்டும் சிறையில் அடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குட்கா முறைகேடு வழக்கில், திருவள்ளூர் மாவட்ட சுகாதார ஆய்வாளரும், முன்னாள் உணவு பாதுகாப்புதுறை அதிகாரியுமான சிவகுமார் கடந்த மாதம் 25ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கப்பட்டது. காவல் நிறைவு பெற்றதை தொடர்ந்து, இன்று மீண்டும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருநீலபிரசாத் முன்னிலையில், சிவக்குமார் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரை மீண்டும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஏற்கனவே, சிவக்குமாரை அக்டோபர் 4 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.