கருணாஸை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி

கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய காவல்துறையின் மனுவை சென்னை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-09-26 11:07 GMT
கடந்த 16ஆம் தேதி சென்னையில் நடந்த கூட்டத்தில் முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக பேசியதாக திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரி நுங்கம்பாக்கம்  போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை எழும்பூர் 14வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் துரை முன் வந்தது. அப்போது நீதிமன்றத்தில் ஆஜரான கருணாஸ், இதற்கு ஆட்சேபணை தெரிவித்தார். சுமார் இரண்டரை மணி நேரம் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, போலீசாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். கருணாஸின் ஜாமின் மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
 
Tags:    

மேலும் செய்திகள்