சிலை கடத்தல் - விக்ரம் சாராபாயின் சகோதரி மனு

தன் மீதான சிலை கடத்தல் வழக்கை ரத்து செய்யக் கோரி இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை என்றழைக்கப்பட்ட விக்ரம் சாராபாயின் சகோதரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Update: 2018-09-26 01:00 GMT
* தஞ்சை பெரிய கோயிலில் 1960 இல் காணாமல் போன ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகளை குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள சாராபாய் பவுண்டேஷன் அறக்கட்டளையிடம் இருந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் அண்மையில் மீட்டு வந்தனர்.

* இந்நிலையில், இது தொடர்பாக,  தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சாராபாய் பவுண்டேஷன் பிரதிநிதியான, 'கிரா சாராபாய்' சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்துள்ளார். இவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை என்றழைக்கப்பட்ட விக்ரம் சாராபாயின் சகோதரி. இவர் தனது மனுவில், தஞ்சை பெரிய கோவிலில் காணாமல் போன சிலைகளும், தங்களிடமிருந்த சிலைகளும் வெவ்வேறானவை என்றும், 1942 முதலே தங்கள் வசம் அந்த சிலைகள் இருந்ததாகவும் கூறியுள்ளார். 

* இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்ய சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அவகாசம் கோரியதை அடுத்து, 6 வாரம் அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்