"பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்தால் இழப்பு ஏற்படும்" - நாராயணசாமி
மத்திய அரசின் தவறான அணுகுமுறையால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.
மத்திய அரசின் தவறான அணுகுமுறையால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல், டீசல் பயன்பாட்டில் கடந்த 4 ஆண்டுகளாக மக்களுக்கு சேர வேண்டிய 11 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு தனது கஜானாவுக்கு எடுத்து கொண்டதாக குறை கூறினார். பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை மாநில அரசுகள் குறைத்தால் மத்திய அரசு இழப்பீடு கொடுக்குமா? என புதுச்சேரி முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.