நவம்பர் ஒன்றாம் தேதி முதல் கருவூலங்கள் ஆன்லைன் மூலம் இயங்கும்...
தமிழகத்தில், கருவூலங்களின் அன்றாடப் பணிகள் அனைத்தும் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் ஆன்லைன் மூலம் செயல்பட உள்ளது.
* கருவூலங்களின் செயல்பாடுகளை வெளிப்படைத் தன்மையுடன் துரிதமாகவும், காகித பயன்பாட்டை தவிர்க்கும் வகையிலும் ஆன்லைன் மூலம் இயங்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 289 கோடி செலவில் கருவூலங்களை முழுவதுமாக கணினிமயமாக்கும் பணிகள் மற்றும் 50,000 ஆயிரம் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணி மூழுவீச்சில் நடைபெற்று வருகிறது .
* ஆன்லைன் முறை, அமலுக்கு வரும் போது 9 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 7 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் . காலையில் கருவூலத்தில் கணக்கை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்தால், மாலையில் பணத்தை பெற்றுக் கொள்ளும் வகையில் பணிகளை முறைப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. 2017 மற்றும் 2018 ஆம் நிதியாண்டில் கருவூலங்கள் சுமார் 3 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பணபரிவர்த்தனை செய்து வருவதாக கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையருமான ஜவஹர் தெரிவித்துள்ளார்தெரிவித்துள்ளார்.