தண்ணீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை - தூர் வாரும் பணியில் இந்தோ-திபெத் வீரர்கள்
தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் வகையில், இந்தோ திபெத் ராணுவ வீரர்கள் தூர் வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிவகங்கை நகர் பகுதியை சேர்ந்த ஒரு லட்சத்திற்கு அதிகமான பொதுமக்கள், குடிக்க நீரின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை போக்க நடவடிக்கை எடுத்து வரும் மாவட்ட நிர்வாகம், இந்தோ திபெத் எல்லைப்பகுதி வீரர்களின் உதவியை நாடி உள்ளது. கோரிக்கையை ஏற்ற, ராணுவ வீரர்கள், சிவகங்கை தெப்பக்குளம் கால்வாயை தூர் வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்பணிகளை, இந்தோ திபெத் டி.ஐஜி ஆஸ்டின் ஈபன், சிவகங்கை எஸ்.பி. ஜெயச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் பார்வையிட்டனர். மலம்பட்டியில் இருந்து 16 கிலோ மீட்டர், தூரம் வரை, தூர் வாரப்பட்டுள்ள நிலையில், நகர்பகுதியில் இயந்திரத்தை பயன்படுத்த முடியாததால், ராணுவ வீரர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.