விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க 10 ஆண்டுகள் எடுத்துக் கொள்வது ஏன் ? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் எந்த மாற்றமும் இல்லை, மின் இணைப்பு வழங்க 10 ஆண்டுகள் எடுத்துக் கொள்வது ஏன்? என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

Update: 2018-09-19 06:28 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் தும்மனபள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராமா ரெட்டி என்ற விவசாயி, தனது விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு கோரி விண்ணப்பித்து பல ஆண்டுகளாகியும் இணைப்பு வழங்கப்படவில்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், விவசாயத்துக்கு மின் இணைப்பு கோரும் விண்ணப்பங்கள் மீது, குறித்த காலத்தில் முடிவு எடுக்காத காரணத்தால், உயர்நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதாக தெரிவித்தார். இதுபோன்ற வழக்குகளில் தாமதமின்றி மின் இணைப்பு வழங்கும் படி, உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்த நீதிபதி, மின் இணைப்பு வழங்க 10 ஆண்டுகள் எடுத்துக் கொள்வது ஏன்? என கேள்வி எழுப்பினார். ஒருநாள் நிகழ்ச்சிக்காக கோடிக்கணக்கான பணத்தை செலவிடும் அரசு விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு ஏன் சிறிது பணம் செலவழிக்கக் கூடாது எனவும் நீதிபதி மகாதேவன் கேள்வி எழுப்பினார். 
Tags:    

மேலும் செய்திகள்