திறக்கப்படுவதற்கு முன்பே உடைந்து விழுந்த திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கு கட்டடம்

சுமார் 2 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கு கட்டிடத்தின் சுற்றுச்சுவர் திறப்பு விழாவிற்கு முன்பாகவே இடிந்து விழுந்துள்ளது.

Update: 2018-09-16 05:08 GMT
* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூரில் தேங்கும் குப்பைகளை தரம்பிரித்து உரமாக்கும் விதமாக,  சுமார் 2 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. 

* அந்த கட்டிடத்தின் முன் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் திறப்பு விழாவிற்கு முன்பாகவே இடிந்து விழுந்துள்ளது. இது போன்ற தரமற்ற கட்டிடங்களை கட்டி மக்களின் வரிப்பணத்தை வீணாக்குவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்