இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தடை தொடர்பாக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதா? - உயர்நீதிமன்றம் கேள்வி

இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடங்கள் வழங்க தடை விதித்து பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதா என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2018-09-15 07:35 GMT
சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகளின் புத்தகச்சுமையை குறைக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக் கூடாது என்றும் இரண்டாம் வகுப்பு வரை இரு பாடங்களும், 3 முதல் ஐந்தாம் வகுப்பு வரை நான்கு பாடங்களும் மட்டுமே பயிற்றுவிக்க வேண்டும் என்று தேசிய ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளதை பின்பற்ற வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இது தொடர்பான வழக்கில், இந்த உத்தரவு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மட்டுமல்ல எனக் குறிப்பிட்ட நீதிபதி கிருபாகரன், உத்தரவை அமல்படுத்தும் வகையில் தமிழகத்தில் மாநில பாட திட்ட பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதா என தமிழக அரசுத்தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். அவ்வாறு சுற்றறிக்கை அனுப்ப தவறினால் அது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை என எச்சரித்த நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்