"மருந்துகளின் வர்த்தக பெயர்களை தடை செய்ய வேண்டும்" - மருத்துவர்கள்
தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதில் மத்திய, மாநில அரசுகள் உறுதியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சாரிடோன், டி-கோல்டு, கோரக்ஸ் உள்ளிட்ட 328 மருந்துகள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்தநிலையில், லாப நோக்கத்திற்காகவே இத்தகைய கலவை மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக கூறுகிறார் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்க தலைவர் ரவீந்திரநாத்.
ஆனாலும், உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் நீதிமன்றங்களுக்கு சென்று தடை உத்தரவு பெற்று வந்து விடுவதாக கூறும் மருத்துவர்கள்,
வளர்ந்த நாடுகளில் உள்ளது போல, தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையை தடை செய்ய நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்த அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
தடை செய்யப்பட்ட மருந்து விற்பனை விவகாரத்தில் மருத்துவர்கள் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்றும் கூறுகிறார் அவர்.
எல்லா கலவை மருந்துகளும் கெட்டது இல்லை என்றும், காசநோய், குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சில கலவை மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளுக்கு பயன்படும் சில கலவை மருந்துகள் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். ஜெனரிக் மருந்துகளை, அரசே தயாரித்து வழங்க முன் வரும்போது, இதுபோன்ற பிரச்சனைக்கு தீர்வுகாண முடியும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.