தி.மு.க. பெண் பிரமுகரை ஏமாற்றி பதிவு திருமணம்

திமுகவை சேர்ந்த பெண் பிரமுகரை ஏமாற்றி பதிவு திருமணம் செய்ததாக, காவல் உதவி ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-09-10 18:39 GMT
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக பிரமுகரான செந்தாமரை என்பவர் கடந்த 2011ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு சென்னை வந்துள்ளார். அப்போது, அண்ணா அறிவாலயத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் சந்தோஷ் குமாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தனது கணவரை பிரிந்த செந்தாமரை, 2016ம் ஆண்டு, சந்தோஷ் குமாரை பதிவு திருமணம் செய்துள்ளார். பின்னர், இருவரும் சென்னை பள்ளிக்கரணையில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். அப்போது, செந்தாமரையிடம் இருந்து 6 லட்ச ரூபாய் பணம் 40 சவரன் நகை ஆகியவற்றை சந்தோஷ் வாங்கியதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், சந்தோஷ்குமாரின் செல்போனில் பல்வேறு பெண்களின் ஆபாச படங்கள் இருப்பதை பார்த்த செந்தாமரை அது குறித்த கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, சில மாதங்களுக்கு முன்பில் இருந்து செந்தாமரையிடம் இருந்து சந்தோஷ் குமார் விலகியுள்ளார். நகை, பணத்தை திரும்ப கேட்டபோது செந்தாமரையை அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது.  இது தொடர்பாக, செந்தாமரை அளித்த புகாரின் பேரில், சந்தோஷ்குமார் மீது பள்ளிக்கரணை போலீசார் 4 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். 

இதற்கிடையே, கடந்த ஜூன் மாதம் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் பணியாற்றியபோது, சந்தோஷ் குமார் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக தகவல் வெளியானது. அதன்பிறகு, மருத்துவ விடுப்பில் சென்ற சந்தோஷ் குமார், அதன்பிறகு பணிக்கு வராததால், இது போன்ற பிரச்சினைகளால் அவர் தலைமறைவாகி விட்டாரா என போலீசார் தேடி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்