மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய ஆட்சியர்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ஜடேரி கிராமத்தில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த வெள்ளை மண் எடுத்துக்கொள்ள மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்து அதே இடத்தில் ஆணையும் பிறப்பித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை அடுத்த ஜடேரி கிராம மக்கள் நாமக்கட்டி தயாரிப்பதை பிரதான தொழிலாக செய்துவருகின்றனர். பல தலைமுறையாக நாமக்கட்டி செய்ய அரசு நிலம் ஒன்றில் வெள்ளை மண் எடுத்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக வெள்ளை மண் எடுக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து பலமுறை கோரிக்கை வைத்தனர். இந்தநிலையில், இன்று, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கிராமத்திற்கு வருகை தந்து ஆய்வு செய்தார்.
குழந்தைகளுடன் அமர்ந்து நாமக்கட்டி செய்த மாவட்ட ஆட்சியர், மக்களின் கோரிக்கையை ஏற்று, 1 வருடத்திற்கு வெள்ளை மண் எடுத்து கொள்ள அனுமதி அளித்ததுடன் அதற்கான ஆணையையும் அதே இடத்தில் வெளியிட்டார். இதனால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.