நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகள் - செப். 10 முதல் விண்ணப்பம் விநியோகம்

துணை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம், வரும் 10-ஆம் தேதி தொடங்க உள்ளதாக, மருத்துவ கல்வி சேர்க்கை செயலாளர் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-07 12:14 GMT
அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில், பி.எஸ்சி., நர்சிங், பி.ஃபார்ம்., பி.பி.டி.,  பி.ஓ.டி., உள்ளிட்ட, 17 துணை மருத்துவ படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டின் கீழ் ஆயிரத்து 882 இடங்கள் உள்ளன. இதில்  சேர்வதற்கான விண்ணப்பங்கள், வரும் 10 தேதி முதல் 19ஆம் தேதி வரை 22 அரசு மருத்துவ கல்லூரிகளில் வழங்கப்படும் என மருத்துவ கல்வி சேர்க்கை செயலாளர் செல்வராஜன் தெரிவித்துள்ளார். இதற்காக, 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு, மாநிலம் முழுவதும் அனுப்பும் பணி, சென்னையில் நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்