சென்னையில் பெட்ரோல் விலை புதிய உச்சம் - வாகன ஓட்டிகள் அதிருப்தி

சென்னையில் பெட்ரோல் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. லிட்டருக்கு 82 ரூபாய் 24 காசுகளாக விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2018-09-03 07:01 GMT
* சென்னையில் பெட்ரோல் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. லிட்டருக்கு 82 ரூபாய் 24 காசுகளாக விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

* சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

* தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து  சரிவைச் சந்தித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது.

* இதன் காரணமாக, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி 80 ரூபாய் 69 காசாகவும், ஆகஸ்ட் 29ஆம் தேதி 81 ரூபாய் 22 காசாகவும், நேற்று 81 ரூபாய் 92 பைசாவாகவும் தொடர்ந்து அதிகரித்தது.

* கடந்த 10 நாட்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 1 ரூபாய் 23 பைசா அதிகரித்துள்ளது.

* இதேபோல், டீசல் விலையும் தொடர்ந்து உச்சத்தை கண்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி லிட்டர் ஒன்றுக்கு 73 ரூபாய் எட்டு பைசாவாக இருந்த விலை, நேற்று 74 ரூபாய் 77 பைசாவாக அதிகரித்தது. இதன்மூலம் 10 நாட்களில் மட்டும் டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 69 பைசாவாக அதிகரித்துள்ளது.

* இதேபோல், டீசல் விலையும் தொடர்ந்து உச்சத்தை கண்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி லிட்டர் ஒன்றுக்கு 73 ரூபாய் எட்டு பைசாவாக இருந்த விலை, நேற்று 74 ரூபாய் 77 பைசாவாக அதிகரித்தது. இதன் மூலம் 10 நாட்களில் மட்டும் டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 69 பைசாவாக அதிகரித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்