60% பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் - டாக்டர் சாந்தா
பிறந்த குழந்தைகளுக்கும் மரபுவழி புற்றுநோய் அதிகரித்து வருகிறது - டாக்டர் சாந்தா
நூற்றுக்கு 60 சதவீதம் பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இயக்குநர் சாந்தா தெரிவித்துள்ளார். சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் இந்திய அளவிலான புற்றுநோய் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் சாந்தா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இன்றைய தலைமுறையினர் துரித வகை உணவுகளை சாப்பிடுவதால் கேன்சர் போன்ற நோய்களுக்கு ஆளாகி வருவதாக கூறினார். பெண்கள் மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் குழந்தைகளும் மரபு வழி புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் சாந்தா தெரிவித்தார்.