ஐ.டி. நிறுவன பெண் ஊழியரின் ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டிய இளைஞர் கைது
சென்னையில் ஐ.டி.நிறுவன பெண் ஊழியரை காதலித்து நகை, பணம் மோசடி செய்ததுடன், இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட வீடியோவை வெளியிடுவேன் என்று மிரட்டிய இளைஞர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த விக்னேஸ்வர் என்வருக்கும், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஊழியருக்கும் இணையதளம் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் நட்பு காதலாக மாறிய நிலையில், தான் ஒரு டான்சர் என்றும், சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாகவும் அதற்கு பணம் வேண்டும் என்றும் விக்னேஸ்வர் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த பெண் ஊழியர் 25 சவரன் நகை மற்றும் இரண்டரை லட்சம் பணத்தை கொடுத்துள்ளார்.