தனியார் காப்பக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : விடுதி உரிமையாளர், காப்பாளர்கள் உட்பட 4 பேர் கைது

சென்னை ஆவடி அருகே தனியார் காப்பகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2018-08-24 05:25 GMT
திருமுல்லைவாயலில் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தனியார் காப்பகத்தில் அன்மையில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
அப்போது காப்பகத்தில் தங்கியுள்ள மாணவிகள் விடுதி காப்பாளர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக முறையிட்டுள்ளனர்.இதையடுத்து மாவட்ட குழந்தைகள் காப்பக அலுவலர் தலைமையில் காப்பகத்தில் விசாரணை செய்த போது பல மாணவிகள் தாங்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.அதை தொடர்ந்து காப்பக உரிமையாளர் விமலா ஜேக்கப், காப்பாளர்கள், உதவியாளர் என 4 பேரை போலீசார் கைது செய்தனர். காப்பகத்தில் இருந்த மாணவிகள் 43 பேரை ஆரிக்கமேட்டில் உள்ள தனியார் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்