சொந்த செலவில் கன்னிவாய்க்காலை தூர்வாரிய மக்கள்...

தஞ்சாவூர் அருகே பொதுப்பணித்துறை அதிகாரிகள் கைவிட்ட நிலையில், மக்கள் ஒன்றிணைந்து சொந்த செலவில் கன்னிவாய்க்காலை தூர்வாரி உள்ளனர்.

Update: 2018-08-22 07:48 GMT
அங்குள்ள கடம்பங்குடி கிராமத்தில் உள்ள கன்னிவாய்க்கால் மூலம் 420 ஏக்கர் விளைநிலம் பயன்பெற்று வந்தது. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த ஏரி தூர்வாரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கொள்ளிடத்தில் திறக்கப்படும் நீர் கன்னிவாய்க்காலுக்கு வரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிறிதும் மனம் தளராத கடம்பங்குடி கிராம மக்கள், வீடு வீடாக சென்று நிதி திரட்டினர். சுமார் 4 கிலோமீட்டர் தூரம் உள்ள கால்வாயை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் தூர்வாரி செப்பனிட்டுள்ளனர். விரைவில் கன்னிவாய்க்காலுக்கு நீர்வரும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 


Tags:    

மேலும் செய்திகள்