ஆசிய விளையாட்டு போட்டி: 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவிற்கு 2 பதக்கங்கள்

ஆசிய விளையாட்டு போட்டியின் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில், தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை இந்தியா கைப்பற்றியது.

Update: 2018-08-21 12:06 GMT
ஆசிய விளையாட்டு போட்டியின் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில், தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை இந்தியா கைப்பற்றியது. ஆடவருக்கான இறுதிச் சுற்றில் 240.7 புள்ளிகள் பெற்று 16 வயதான இந்திய வீரர் செளரப் சவுத்ரி தங்கம் வென்றார். 

இது இந்தியா வெல்லும் 3வது தங்கமாகும். இதே பிரிவில் களமிறங்கிய மற்றொரு இந்திய வீரர் அபிசேக் வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர் சஞ்சீவ் வெள்ளி வென்றார்
    ஆசிய போட்டியில் துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
 
 இறுதிப் போட்டியில் 452.7 புள்ளிகள் பெற்றார், 37 வயதான சஞ்சீவ். துப்பாக்கி சுடுதலில் மட்டும் இந்தியா இதுவரை 6 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டி, கபடி: மகளிருக்கான கபடி லீக் சுற்றில் இந்திய அணி
    ஆசிய விளையாட்டு போட்டியில், மகளிருக்கான கபடி லீக் சுற்றில் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது. 

முதலில், இலங்கையை எதிர்கொண்ட இந்தியா,  38-க்கு 12 என்று புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதைதொடர்ந்து இந்தோனேஷியாவை 54க்கு22 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.

16 வயதில் சாதனை படைத்த இந்திய வீரர்
    ஆசிய போட்டி துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்ற சௌரப் சவுத்திரிக்கு வயது 16.

தனது 15 வயதில் தான் மீரட் நகரில் துப்பாக்கிச் சுடுதலுக்கு பயிற்சியை தொடங்கினார். பயிற்சியின் போதே சிறந்து விளங்கிய அவர், ஜெர்மனியில் நடைபெற்ற உலக ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 3 தங்கம் வென்று அசத்தினார்.  இந்த நிலையில், தற்போது ஆசிய போட்டியில், செளரப் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

 


Tags:    

மேலும் செய்திகள்