சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்கு வழங்கிய சிறுமி

விழுப்புரத்தைச் சேர்ந்த அனுப்பிரியா சைக்கிள் வாங்க சேமித்து வைத்திருந்த பணத்தை கேரள வெள்ள பாதிப்புக்கு அளிக்க முன்வந்துள்ளார்.

Update: 2018-08-20 03:23 GMT
* விழுப்புரத்தைச் சேர்ந்த கே.கே.ரோடு சிவராம் லே-அவுட் பகுதியைச் சேர்ந்த சிவசண்முகநாதன்-லலிதா தம்பதியரின் மகள் அனுப்பிரியா, பிறந்த நாளுக்காக, சைக்கிள் வாங்க சேமித்து வைத்திருந்த பணத்தை கேரள வெள்ள பாதிப்புக்கு அளிக்க முன்வந்துள்ளார். 

* LKG முதல் 4 ஆண்டுகளாக உண்டியலில் சேமித்து வைத்திருந்த 8 ஆயிரத்து 246 ரூபாயை, கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு வங்கி வரைவோலை எடுத்து அனுப்பவுள்ளதாக சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.


மாணவி அனுப்பிரியாவிற்கு ஆண்டுதோறும் புதிய சைக்கிள் - ஹீரோ மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் அறிவிப்பு 


* இதனிடையே, சைக்கிள் வாங்க சேமித்து வைத்திருந்த பணத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்கு கொடுத்துள்ள  மாணவி அனுப்பிரியாவிற்கு ஆண்டுதோறும் ஒரு புதிய சைக்கிளை வழங்க ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது. 

* இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பங்கஜ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மாணவியின் உன்னதமான ஆத்மாவை வணங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்


Tags:    

மேலும் செய்திகள்