அமராவதி, திருமூர்த்தி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை உப்பாறு அணைக்கு திறக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க, திருப்பூர் மாவட்டம் உப்பாறு அணைக்கு தண்ணீரை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-08-19 04:54 GMT
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை காரணமாக உடுமலை திருமூர்த்தி அணை மற்றும் அமராவதி அணைகள் நிரம்பி வழிகின்றன. அவற்றிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் வீணாக கடலில் கலப்பதாகவும், அதை தடுக்கும் வகையில் திருப்பூர் மாவட்டம் உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 1968 ஆம் ஆண்டு கட்டப்பட்ட உப்பாறு அணை மூலம் 20 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என்று கூறிய விவசாயிகள், தண்ணீரே இல்லாத உப்பாறு அணைக்கு 10 கோடி ரூபாய் செலவில் கரைகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதாக புகார் தெரிவித்துள்ளனர். உப்பாறு அணையிலிருந்து கிராவல் மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்