சிறு நதிகளை இணைக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

நீலகிரி மாவட்டத்தில் உருவாகி அரபிக் கடலில் கலக்கும் நீரை பாசனத்துக்கு பயன்படுத்தும் வகையில் சிறு நதிகளை இணைக்க கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2018-08-17 05:40 GMT
நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் 15 சிறு நதிகள் ஓவேலி ஆற்றில் தேவாலா என்ற இடத்தில் ஒன்று சேர்ந்து பாண்டியாறு, புன்னம்புலா ஆறு என்று அரபிக் கடல் நோக்கி பாய்கிறது. இந்த ஆறுகளில் ஆண்டுக்கு 180 டி.எம்.சி. நீர் வீணாக சென்று அரபிக் கடலில் கலக்கிறது. இதனை தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்கு பயன்படுத்தும் வகையில் அணை கட்டி திருப்ப உத்தரவிடக் கோரி, தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதிகள் சுந்தரேஷ், மற்றும் சதீஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,  செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் மனுவுக்கு பதில் அளிக்குமாறு பொதுப்பணித் துறை செயலாளர் மற்றும் தலைமை பொறியாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்