சாதிக்க துடிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்

உடல் குறைபாட்டைக் கண்டு துவண்டு விடாமல் சாதிக்கத் துடிக்கும் மாணவர் அஜித்-ன் தன்னம்பிக்கை குறித்து செய்தி தொகுப்பு.

Update: 2018-08-16 07:43 GMT
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை அடுத்த நவல்பூர் பகுதியை சேர்ந்த மாசிலாமணி - கிருஷ்ணவேணியின் கடைசி மகன் தான் இந்த அஜித் குமார். மொத்தமே இரண்டரை தான் உயரம்..கை, கால்கள் ஒரு அடி உயரம் தான் இருக்கிறது. ஆனால், இவரது எண்ணமும், உறுதியும், இமய மலை அளவு உயர்ந்திருக்கிறது.

தந்தை இல்லாத நிலையில், மொத்த பாரத்தையும் தாய் கிருஷ்ணவேணி சுமந்து வருகிறார். உடலளவில் தளர்ந்தாலும், மனதளவில் தளராத தன்னம்பிக்கை கொண்டுள்ள அஜித் குமார், வீட்டிலிருந்த படியே படித்து, 10 வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில், 292 மதிப்பெண்கள் பெற்றார். 

தினசரி பள்ளிக்குச் சென்று, படிக்க வேண்டும் என்ற அஜித்குமாரின் ஆசையை, ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, வாரி அணைத்துக் கொண்டு, பூர்த்தி செய்துள்ளது. 11ம் வகுப்பில் பள்ளியிலேயே 4வது மாணவராக வந்த அஜித்குமார், பிளஸ்-2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார் என, ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்