பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகம்

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற வாரச்சந்தையில் 3 மணி நேரத்தில் 5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆகின.

Update: 2018-08-15 10:02 GMT
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற 
வாரச்சந்தையில் மூன்று மணி நேரத்தில் 5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆகின. வாரம் தோறும் புதன் கிழமை அன்று நடைபெறும் வாரச்சந்தையில் ஆட்டு சந்தையும் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று காலை 7 மணிக்கு ஆடுகள் விற்பனை தொடங்கிய நிலையில், காலை 9 மணிக்குள் சுமார் 6 ஆயிரம் ஆடுகள் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பக்ரீத்பண்டிகையையொட்டி எழை எளிய மக்களுக்கு ஆட்டு இறைச்சிகளை தானமாக குர்பானி கொடுப்பதற்காக  ஆடுகளை அதிக அளவில் இஸ்லாமியர்கள் வாங்கி சென்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்