தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நெல்லை மாவட்டம் பாபநாசம்,சேர்வலாறு அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்படுவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2018-08-15 01:45 GMT
நெல்லை மாவட்டம் பாபநாசம்,  சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது, தொடர்மழை காரணமாக சேர்வலாறு அணை தனது முழு கொள்ளளவை எட்டி வருகிறது. 

தற்போது அணையின் நீர்மட்டம் 150 அடியாக உள்ளது. இபோல் 143 கொள்ளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 130 அடியாக உள்ளது. இந்நிலையில் பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 11 ஆயிரத்து 500  கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 

இதேபோல் கடனாநதி, ராமநதி, அணைகள் நிரம்பியதையடுத்து சுமார் 5 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. முக்கிய அணைகளில் இருந்து அதிக நீர் வெளியேற்றப்படுவதால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்