மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது...
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 89 ஆயிரத்து 15 கனஅடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணை:
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 89 ஆயிரத்து 15 கனஅடியாக குறைந்துள்ளது. நீர்மட்டம் 120 புள்ளி மூன்று ஒன்று அடியாக நீடிக்கிறது. குடிநீர், பாசன தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 88 ஆயிரத்து 518 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: வினாடிக்கு 20,000 கனஅடி நீர்வரத்து
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பியதை தொடர்ந்து, அங்கிருந்து பில்லூர் அணைக்கு கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி, வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த நீர் அப்படியே அணையில் இருந்து வெளியேற்றப்படுவதால், பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பவானி அணைக்கு நீர்வரத்து உயர்வு: வினாடிக்கு 8,928 கனஅடி நீர்வரத்து
மேற்குதொடர்ச்சி மலையில் தொடரும் மழை காரணமாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரத்து 928 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர்மட்டம் 99 புள்ளி மூன்று எட்டு அடியாகவும், நீர் இருப்பு 28 புள்ளி இரண்டு டிஎம்சியாகவும் இருக்கிறது. வினாடிக்கு 3 ஆயிரத்து 800 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.