திருச்சி விமானநிலைய தங்கம் கடத்தல் : 6 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

சுங்கத் துறை உதவி ஆணையர் வெங்கடேசலு உள்ளிட்ட 6 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து சுங்கத்துறை அதிரடி

Update: 2018-08-07 08:01 GMT
திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் தொடர்பாக கைதான சுங்கத் துறை உதவி ஆணையர்  வெங்கடேசலு உள்ளிட்ட  6 சுங்கத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மலேசியாவில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு அதிக அளவில் தங்கம் கடத்தப்படுவதாக புகார் எழுந்தது.

இதனால், நேற்று முன் நாள் திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ குழுவினர் திடீர் சோதனை நடத்தினர். 


நேற்றும் சோதனை தொடர்ந்த நிலையில், கணக்கில் வராத 8 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 


இந்நிலையில், சுங்கத் துறை உதவி ஆணையர் வெங்கடேசலு, சுங்க துறை கண்காணிப்பாளர்கள் கழுகாசலமூர்த்தி, ராமகிருஷ்ணன், சுங்கத்துறை ஆய்வாளர்கள் அனீஸ் பாத்திமா, பிரஷாந்த் கவுதம், பிரீடி கவுதம் என சுங்கத் துறை அதிகாரிகள் 6 பேரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்துள்ளனர்

குருவிகள் என அழைக்கப்படும் தங்க கடத்துவோர் 
முருகேசன், தமயந்தி,  தீவகுமார், மனோகரன் முத்துக்குமார், அப்துல் ரமீஸ், மகேஸ்வரன், சுரேஷ், கனகா, சாந்தி, ராமலட்சுமி, லெட்சுமி, வள்ளி, புஷ்பா
ஆகிய 13 பேரையும் சிபிஐ போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

அவர்கள் 19 பேரையும் மதுரை அழைத்து சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

இதனிடையே, சுங்கத் துறை உதவி ஆணையர்  வெங்கடேசலு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தங்கம் கடத்தலில் தொடர்பு இருப்பதாக கைதான  சுங்கத் துறை கண்காணிப்பாளர்கள் கழுகாசலமூர்த்தி, ராமகிருஷ்ணன், ஆய்வாளர்கள் அனீஸ் பாத்திமா, பிரஷாந்த் கவுதம், பிரீடி கவுதம் ஆகிய மேலும் 5  பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்