புதிய மொபைல் செயலி மூலம் வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி புதிய மொபைல் செயலி மூலம் இன்று தொடங்கியுள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் கணக்கெடுப்பு பணியில், இம்முறை 300க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது புதிய மொபைல் செயலி மூலம் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுவதால் வனத்துறை ஊழியர்களுக்கு ஆண்ட்ராய்டு செல்போன்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆறு நாட்கள் நடைபெறும் இந்த கணக்கெடுப்பு முடிவுகள், தலைமை வனப்பாதுகாவலருக்கு சமர்ப்பிக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.