69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு - உச்சநீதிமன்றம் தள்ளுபடி

மருத்துவம் பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை ஏற்படுத்த முடியாது என்றும், 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Update: 2018-08-01 11:46 GMT
* தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீடு முறையால், மருத்துவ மாணவர் சேர்க்கையில் தங்களுக்கு இடம் கிடைக்கவில்லை எனக் கூறி, உச்சநீதிமன்றத்தில் இரண்டு மாணவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

* இந்த வழக்கு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

* அப்போது, உரிய மதிப்பெண் எடுத்திருந்த போதிலும், தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையால், தங்களால் மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை என்றும், எனவே மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் இடங்களை உருவாக்கி தங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் மாணவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

* அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை ஏற்படுத்த முடியாது என்றும், வேண்டுமென்றால், தமிழகத்தில் அமலில் இருக்கும் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்