பரங்கிமலை விபத்து குறித்து விசாரணையை துவக்கினார் ரயில்வே பாதுகாப்பு ஆணையர்

ரயில் படியில் பயணம் செய்வோரின் ரயில்வே பாஸ் நிரந்தரமாக ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரயில்வே பாதுகாப்பு படை மூத்த ஆணையர் லூயிஸ் அமுதன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-07-30 13:14 GMT
* கடந்த 24 ஆம் தேதி, சென்னை பரங்கி மலை ரயில் நிலையத்தில் நடந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ரயில்வே தீர்ப்பாயம் தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்து இறந்தவர்களுக்கு 8 லட்ச ரூபாயும், அடிபட்டவர்களுக்கு 2 லட்ச ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளது. மேலும் விபத்து குறித்து ரயில்வே நிர்வாகம், ரயில்வே பாதுகாப்பு படை உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. 

* இந்நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகர் தலைமையிலான குழு சென்னை கோட்ட மேலாளர் அலுவலகத்தில் விசாரணையை துவக்கியுள்ளது. 

* படியில் பயணம் செய்வதை தடுக்க விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும். படிக்கட்டில் பயணம் செய்தால் அவர்களின் ரயில்வே பாஸ் நிரந்தரமாக ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சென்னை கோட்ட  ரயில்வே பாதுகாப்பு படை மூத்த ஆணையர் லூயிஸ் அமுதன் தெரிவித்துள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்