கடல் நீர் உள் வாங்கியது : கடல்வாழ் உயிரினங்கள் தவிப்பு

ராமேஸ்வரம் பகுதியில் கடல் நீர் உள்வாங்கியதால் கடல்வாழ் உயிரினங்கள் நீர் இன்றி தவித்து வருகின்றன.

Update: 2018-07-29 14:24 GMT
ராமேஸ்வரம் பகுதியில் கடல் நீர் உள்வாங்கியதால் கடல்வாழ் உயிரினங்கள் நீர் இன்றி தவித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக இங்குள்ள சங்குமால் கடற்கரையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் நாட்டுப் படகுகள் அனைத்தும் தரைதட்டி நிற்கின்றன. இந்நிலையில், கடல் நீர் உள்வாங்கியுள்ளதால் கடலின் அடியில் உள்ள தாவரங்களும் மீன்களும் தெளிவாகக் காணப்படுகின்றன. இதில் சிப்பிகள் நட்சத்திர மீன்கள் மற்றும் அரிய வகை பூச்சியினங்களும் தண்ணீரின்றி கரையில் உயிருக்கு போராடி வருகின்றன. 
Tags:    

மேலும் செய்திகள்