"பழைய கார்களுக்கு உயிர் தரும் மெக்கானிக்"
பழைய கார்களுக்கு உயிர் கொடுத்து வருகிறார், தூத்துக்குடியைச் சேர்ந்த மெக்கானிக் தனஞ்செயன்
டிப்ளமோ மெக்கானிக்கல் படித்துள்ள,தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தனஞ்செயன், 1920ம் ஆண்டுகளில் இருந்து பிரபலமான பழைய கார்களை வாங்கி,அதனை புதுப்பித்து தருகிறார். பழைய கார்களுக்கு இன்றும் மவுசு குறையவில்லை என்று கூறும் தனஞ்செயன், இந்த பழைய கார்களுக்கான உதிரி பாகங்களைத்தேடி,நீண்ட பயணம் மேற்கொண்டு வருகிறார். இதனை தேடி வந்து வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர் இருப்பதாகவும், பழைய பொக்கிஷங்களை பாதுகாக்கும் முயற்சி மகிழ்ச்சியளிப்பதாகவும், தெரிவித்துள்ளார்.