தங்கம், வெள்ளியை உருக்கி ஆடை, ஆபரணங்கள்...அசத்தி வரும் ராதாகிருஷ்ணன்

கோவையில் தங்கம், வெள்ளியை உருக்கி ஆடை, ஆபரணங்களை செய்யும் புதுவித முயற்சியில், அசத்தி வருபவர் பற்றிப் பார்க்கலாம்.

Update: 2018-07-23 03:40 GMT
வளையல், கம்மல், மோதிரம் போன்ற அணிகலன்களை உருவாக்கும் நகைப்பட்டறை தொழில் நலிவடைந்துவிட்டதால் போதிய வருமானமின்றி தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், புதுமையாக சிந்தித்து தங்கம், வெள்ளி போன்றவற்றை உருக்கி, ஆடைகளாக மாற்றும் கலையில் அசத்தி வருகிறார் கோவையை சேர்ந்த ராதாகிருஷ்ணன். கோவை மேட்டுப்பாளையம் சாலை தொப்பம்பட்டியில் வசிக்கும் இவர், ஆண்களுக்கான கோட், தலைப்பாகை, கைக்குட்டை போன்றவற்றை தயாரித்துள்ளார்.

தனது புதுமை முயற்சிக்கு மனைவி, மகன், மகள் உதவியாக இருப்பதாகக் கூறும் இவர், தனது சொந்த முயற்சியால், ஆடைகளை வடிவமைப்பதற்கான இயந்திரங்களை தாமே உருவாக்கியுள்ளார். வெள்ளியால் உருவாக்கப்படும் ஆடைகளுக்கு 2 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும், தங்கத்தாலான ஆடைகளை 35 லட்சம் ரூபாய் செலவிலும் உருவாக்க முடியும் என்கிறார். நலிவடைந்துவரும் நகைப்பட்டறை தொழிலால் சோர்ந்துவிடாமல், எதிலும் புதுமையை புகுத்தினால் வருமானம் ஈட்ட முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார், ராதாகிருஷ்ணன்.


Tags:    

மேலும் செய்திகள்