தனியார் துறைமுகத்தில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு

காரைக்கால் அருகே உள்ள தனியார் துறைமுகத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2018-07-22 06:05 GMT
காரைக்கால் அருகே உள்ள தனியார் துறைமுகத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அந்த துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி துகள்கள் காற்றில் பரவுவதால் சுவாச கோளாறு உள்ளிட்ட பல்வேறு  பாதிப்புகள் ஏற்படுவாக புகார் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தனியார் துறைமுகத்தை நேரில் ஆய்வு செய்த கிரண்பேடி, நிலக்கரி துகள்கள் காற்றில் பரவுவதை கேமராக்கள் மூலம் கண்காணிக்க உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்