ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபா மனு
"அப்பலோ ஆய்வின்போது அனுமதிக்க வேண்டும்" விசாரணை ஆணையத்திடம் தீபா கோரிக்கை
அப்பல்லோ மருத்துவமனையில் ஆய்வு நடத்தும் போது, தம்மையும் அனுமதிக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கோரிக்கை விடுத்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம் 29ம் தேதி முதல் அப்பலோ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்கிறது. இந்நிலையில் தீபா ஆணையிடத்திடம் அளித்துள்ள மனுவில், சட்ட ரீதியாக தாமும், தமது சகோதரருமே, ஜெயலலிதாவின் உறவினர் என்றும், எனவே அப்பலோ மருத்துவமனை ஆய்வில் நீதிபதி விருப்பத்தின்பேரில் தம்மை அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.