குடிசைகள் அற்ற நகரத்தை உருவாக்க அரசு நடவடிக்கை - துணை முதலமைச்சர்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டம் 2020ன் படி குடிசை பகுதியற்ற நகரங்களை உருவாக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Update: 2018-07-20 13:08 GMT
சென்னையில் நடைபெற்ற இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், மனிதனுக்கு உடை, உணவு எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு சுகாதாரமாகவும், நாகரிகமாகவும் வாழ வீடு அவசியம் என்றார். சென்னை மாநகர நதி கரையோர  பகுதி மக்களுக்கு 38 ஆயிரம் அடுக்குமாடி  குடியிருப்புகள் அமைக்க  திட்டம் தயாரிக்கப்பட்டு மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டு உள்ளதாகவும் துணை முதலமைச்சர்  குறிப்பிட்டார்
Tags:    

மேலும் செய்திகள்