தமிழகத்தில் 1.18 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் - அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில், தற்போதைய நிலவரப்படி 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஆண்டுக்கு 5,000 பேர் என்ற அளவில், புதிதாக இந்நோய்க்கு ஆளாகி வருவதும் தெரிய வந்துள்ளது.

Update: 2018-07-20 06:12 GMT
தமிழகத்தில் 1.18 லட்சம் பேருக்கு எய்ட்ஸ்

உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸை கட்டுப்படுத்த, பல்வேறு அமைப்புகளும், தமிழக அரசும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. எனினும், தற்போதைய நிலவரப்படி, தமிழகம் முழுவதும் 1 ஒரு லட்சத்து 18 ஆயிரம் பேர், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துமனைகள் மூலம் சிகிச்சை பெற்று வருவதாக, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் தெரிவித்துள்ளது. அரசின் சிகிச்சை வட்டத்திற்குள் வராமல், 8 ஆயிரம் பேர் வெளியிடங்களில் சிகிச்சை எடுத்து வருவதாகவும், அவர்களையும் அரசின் சிகிச்சை வளையத்திற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

ஆண்டுக்கு 5 ஆயிரம் பேர் வீதம், தகாத உறவு மற்றும் வேறு பல வகைகளினால், எச்.ஐ.வி., கிருமியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது. ஆனால், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, தற்போதைய எண்ணிக்கை குறைவு என்பது குறிப்பிடத் தக்கது ..2016ல், 6 ஆயிரம் பேர் புதிதாக எய்ட்ஸ் நோயாளிகளாக இருந்த நிலையில், அது 2017 ல் 5 ஆயிரமாக ஆக குறைந்திருக்கிறது. போதிய சிகிச்சை வசதி இல்லாத கால கட்டத்தில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், 2 அல்லது 3 ஆண்டுகளில் உயிரிழந்தனர் என்றும், ஆனால் தற்போது அரசு வழங்கும் முறையான சிகிச்சையை  ஒருவர் எடுத்துக்கொண்டால் 30 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது... 


Tags:    

மேலும் செய்திகள்