மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 1.04 லட்சம் கனஅடியாக குறைந்தது

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 436 கனஅடியாக குறைந்துள்ளது.

Update: 2018-07-18 07:23 GMT
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடரும் மழை காரணமாக கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ் ஆகிய அணைகளில் இருந்து தமிழகத்தில் நீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது மழை அளவு சற்று குறைந்துள்ள நிலையில், இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து ஒரு லட்சத்து 7 ஆயிரம்  கனஅடியில் இருந்து ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 436 கனஅடியாக குறைந்தது. 

அணையின் நீர்மட்டம் 102 புள்ளி ஆறு எட்டு அடியாகவும், நீர் இருப்பு 68 புள்ளி மூன்று ஐந்து டிஎம்சியாகவும் உள்ளது.  அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. பாசன தேவைக்காக  மேட்டூர் அணையை நாளை முதலமைச்சர் 
பழனிசாமி திறந்து வைக்க உள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்