ரூ.1259 கோடி டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆயிரத்து இருநூற்று 59 கோடி ரூபாய் செலவில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கான டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

Update: 2018-07-16 12:36 GMT
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலி பகுதியில் ஆயிரத்து 259 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவில், தினமும் 150 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு, சென்னை  குடிநீர் வாரியம் கடந்த ஆண்டில் ஒப்பந்த புள்ளிகள் கோரியது.  

இந்நிலையில் சட்ட விரோதமாக ஒரு நிறுவனத்தை தேர்வு செய்ய, குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளதாக கூறி தனியார் நிறுவனம் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'டெண்டரில் பங்கேற்காத நிறுவனத்துக்கு வழக்கு தொடர எந்த அடிப்படை உரிமையும் இல்லை' என கூறி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். ஏற்கனவே டெண்டருக்கு விதிக்கப்பட்டிருந்த தடையையும் நீக்கி உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்